இதை குறைத்தால் புடின் எரிச்சலடைவார்! ஜேர்மனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அரசு


ஜேர்மன் மக்கள் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென  பொருளாதார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனி ரஷ்ய எரிசக்தியை தொடர்ந்து இறக்குமதி செய்வதால் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

எரிசக்தி இறக்குமதி செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு பில்லியன் யூரோக்கள் ரஷ்யாவிற்கு வருமானம் கிடைப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் Josep Borell மதிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜேர்மன் மக்கள் தங்கள் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்குமாறு ஜேர்மனியின் பொருளாதார அமைச்சரும், துணை அதிபருமான Robert Habeck அழைப்பு விடுத்துள்ளார்.

எரிசக்தி பயன்பாட்டை குறைப்பது எளிதானது மற்றும் இது புடினை எரிச்சலடைய வைக்கும் என கூறினார்.

உக்ரைன் மீதான போரை நீடிப்பதில் ஜேர்மன் எரிசக்தி இறக்குமதிக்கு பங்கு இருப்பதை ஒப்புக்கொண்ட Habeck, ஆனால் ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை நிறுத்துவது ஒரு பொருளாதாரக் கொள்கை கனவு என்று கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.