இப்படியொரு யாக்கரா…வாய்பிளந்த ரசிகர்கள்: துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்த டேல் ஸ்டெய்ன்!


ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய யாக்கர் கிரிக்கெட் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

ஐபிஎல்-லின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 175 ஓட்டங்களை குவித்து இருந்த நிலையில், அதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.5 ஓவர்களிலேயே துரத்தி வெற்றியை அபாரமாக கைப்பற்றியது.


விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் யாக்கர் ஒன்றை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் வீசினார்.

கொல்கத்தா அணி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய போது ஆட்டத்தின் 9வது ஓவரை ஹைதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் வீசினார்.

அதைத்தொடர்ந்து அவர் வீசிய 9வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 149 கிலோமீட்டர் வேகத்தில் வந்த பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசிப்பதற்குள்ளாக உம்ரான் மாலிக் வீசிய யாக்கர் பந்து ஸ்டெம்பில் பட்டு தெறித்தது.

உம்ரான் மாலிக்கின் இந்த யாக்கரை பார்த்து பெவிலியன் இருந்த முன்னாள் தென்-ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன் துள்ளி குதித்து கொண்டாட, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஸ்டெம்பில் பட்டு தெறித்து சென்ற பந்தை பார்த்து வாய்பிளந்து நின்றனர்.

இதையடுத்து தற்போது உம்ரான் மாலிக் வீசிய யாக்கர் வீடியோ இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது. 

பந்துகளை பறக்கவிட்ட ராகுல் திரிபாதி: வெற்றியை சுலபமாக கைப்பற்றிய சன்ரைசர்ஸ்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.