வெளிநாட்டு ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்க்க வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் நிதியுதவியைக் கோரினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.
அமெரிக்காவின் ஆதரவு அரசைக் கவிழ்த்து புதிதாகத் தேர்தலை சந்திக்க தமது கட்சிக்கு நன்கொடைகளை அள்ளி வழங்குமாறும் அவர் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 கோடி பாகிஸ்தான் மக்கள் மீது ஊழல் அரசு திணிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களை யார் ஆள வேண்டும் என்று பாகிஸ்தான் மக்களே முடிவு செய்யட்டும் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.