டெல்லி: மேற்குவங்கம் உள்பட 4 மாநில இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்தவாரம், நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதியத்திற்க மேல் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.