தொடர்ந்து குறையும் பாதிப்பு தென்கொரியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

சியோல், 
தென்கொரியாவில் ஒமைக்ரான் தாக்கத்தின் எதிரொலியால் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. கடந்த மாத மத்தியில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியிருந்தது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. இந்தநிலையில் தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 1¼ லட்சமாக குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று ஒரு நாளில் அங்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, நாட்டில் அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 18-ந்தேி முதல் இரவு நேர ஊரடங்கு, தனியார் நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு அதிகமாக கூடுவதற்கான தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பொதுஇடங்களில் கட்டாயம் முக கவசம் அணிவது இன்னும் 2 வாரங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.