சென்னை: அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நங்கநல்லூரை சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் கைது செய்தது. அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தவர் ரமணி.