உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியில் பாகிஸ்தானை புகழ்ந்து பாடும் பாடல்களை செல்போனில் இசைத்தபடி பாடி தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த ஆஷிஷ் என்பவரின் புகாரின் பேரில் பரேலியில் உள்ள பூட்டா பகுதியின் சிங்கை முராவன் கிராமத்தைச் சேர்ந்த இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானை புகழ்ந்து பாடும் பாடலை பாடியதற்கு இருவரிடமும் ஆஷிஷ் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் ஆஷிஷூடன் சண்டையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோவை படம்பிடித்த ஆஷிஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது காவல்துறையின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து