டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், வருகிற 20ஆம் தேதி நடைபெறுகிறது.
டெல்லியில் நேற்று முன்தினம் 325ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை, நேற்று 366ஆக அதிகரித்துள்ளது. அதில் 14 பேர் குழந்தைகள். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் பலருக்கு கொரோனா தவிர வேறு சில நோய்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா பரவலை பொறுத்து சில இடங்களில் வகுப்புகளும் சில இடங்களில் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.