கோயம்புத்தூரில் தலைமைக் காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கோவை சொக்கம்புதூர் பகுதியில் வசித்து வரும் தலைமை காவலர் செந்தில், இரவில் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
கஞ்சா விற்பனை தொடர்பான சோதனைக்கு வருமாறு அதிகாலையில் அவருக்கு அழைப்பு வந்ததால், இரு சக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது, அது காணாமல் போனதை கண்டு புகார் அளித்தார்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, செந்திலின் வாகனத்தை மர்ம நபர்கள் எடுத்துச் செல்வது தெரியவந்தது.