டிவிட்டரில் 19வயது சிறுவன் ஜாக் ஸ்வீனி எலான் மஸ்க்-ஐ தெறிக்க விட்டதை யாராலும் மறுக்க முடியாது. ஜாக் உடன் இருந்த ஈகோ பிரச்சனை காரணமாகத் தான் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்க முடிவு செய்துள்ளாரா..?
2-3 வாரங்களில் 20% வரை லாபம் கிடைக்கலாம்.. 3 பங்குளை பரிந்துரை நிபுணர்கள்..!
டிவிட்டரை எலான் மஸ்க் வாங்குவது குறித்து ஜாக் ஸ்வீனி என்ன சொல்லியுள்ளார் தெரியுமா..?
ஜாக் ஸ்வீனி
ஜாக் ஸ்வீனி உலகின் முன்னணி தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பிரைவேட் ஜெட் விமானத்தின் இருப்பிடத்தையும், அந்த விமானம் எங்கெல்லாம் செல்கிறது என்பது பாட் மூலம் தொடர்ந்து டிவீட் செய்து வருகிறார். இதில் டெஸ்லா எலான் மஸ்க்-ன் பிரைவேட் ஜெட் கல்ப்ஸ்ட்ரீம் விமானமும் அடக்கம்.
@ElonJet டிவிட்டர் கணக்கு
இந்நிலையில் எலான் மஸ்க் நவம்பர் 2021ல் தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதால் ஜாக் ஸ்வீனி-யிடம் தனது விமானத்தின் இருப்பிடத்தைப் பதிவிடும் @ElonJet டிவிட்டர் கணக்கை மூட வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஜாக் ஸ்வீனி பணம் கேட்டது மட்டும் அல்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் இண்டர்ஷிப் கேட்டார்.
ஜாக் ஸ்வீனி உடன் ஈகோ பிரச்சனை
எலான் மஸ்க் டிவிட்டரில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், ஜாக் ஸ்வீனியின் பதிலைக் கேட்டோ எலான் மஸ் கடுப்பாகி 19 வயது மட்டுமே ஆன ஜாக் ஸ்வீனி-யை டிவிட்டரில் பிளாக் செய்துள்ளார். இதில் எலான் மஸ்க்-ன் ஈகோ-வை ஜாக் சீண்டியுள்ளார்.
ப்ரீ ஸ்பீச்
இந்தப் பிரச்சனைக்குப் பின்பு தான் எலான் மஸ்க் ப்ரீ ஸ்பீச் குறித்த கேள்விகள் எழுந்து தற்போது டிவிட்டரை நிறுவனத்தை மொத்தமாக வாங்க முடிவு செய்து அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜாக் ஸ்வீன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?
ஜாக் ஸ்வீனி பதில்
எலான் மஸ்க்-ன் 43 பில்லியன் டாலர் ஆஃபர் டிவிட்டர் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் சிறப்பானதாக இருக்கலாம், ஆனால் எனக்கு இல்லை. எலான் மஸ்க்-ஐ டிவிட்டரை கைப்பற்றினால் என்னுடைய கணக்கை முடக்க முடியும், இதைச் செய்யக்கூடிய ஆள் தான் எலான் மஸ்க் என ஜாக் ஸ்வீனி தெரிவித்துள்ளார்.
Elon musk offer to twitter benefits them, but not me says Jack Sweeney
Elon musk offer to Twitter benefits them, but not me says Jack Sweeney டிவிட்டர்-ஐ எலான் மஸ் கைப்பற்ற ஈகோ-வும் ஒரு காரணமா..? சோகத்தில் ஸ்வீனி..!