பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுக்கு தடை?

ராமநவமி அன்று, மத்திய பிரதேசம், கோவா, குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், இந்து அமைப்புகள் கடந்த வாரம் ஊர்வலங்கள் நடத்தின. அவற்றில் ஒரு கும்பல் கற்களை வீசியதால் வன்முறைகள் அரங்கேறின. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் குறித்து, அந்தந்த மாநிலங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், “ராஜஸ்தானின் கரோலி பகுதியில் நடந்த வன்முறையில்,
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது” என,
பாஜக
தேசிய இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டி உள்ளார்.

ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் நடந்த வன்முறைக்கும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது, பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இந்த நிலையில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய,
மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுக்கு ஏற்கனவே பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.