இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. சரியான பொருட்களுக்கு, சரியான விலையில், சிறப்பான மார்கெட்டிங் இருந்தால் போதும் மிகப்பெரிய வெற்றி தான்.
ஆனாலும் சில நிறுவனங்கள் வெளிநாட்டில் சிறப்பான வர்த்தகத்தை வைத்திருந்தாலும் இந்தியாவில் வெற்றி அடைய முடியாமல் பல வருடங்களாகத் தவித்து வருகிறது.
ஹோம் லோன்: எஸ்பிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் இதுதான்..!
இந்தியா
இந்தியாவில் ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ் ரேங்கிங் தொடந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது, இதனால் தற்போது சிறிதும் பெரிதுமாக இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்க மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக டெக்னாலஜி பிரிவில் அதிகளவிலான நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கி வருகிறது.
ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ்
இந்நிலையில் இந்தியாவின் ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ் ரேங்கிங் 2015ல் 142 ஆக இருந்த நிலையில், 2020ல் 63ஆக முன்னேறியுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல விதிமுறை மற்றும் செயலாக்க மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தாராளமயமாக்கல்
1990க்குப் பின் அதாவது தாராளமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு பல சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தது, இதில் பல நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வெற்றி பெற்றாலும் சில பெரும் நிறுவனங்கள் வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறது.
டன்கின் டோநட்ஸ்
டன்கின் டோநட்ஸ் என்பது உலகளவில் மிகவும் பிரபலமான காலை உணவு நிறுவனமாகவும், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு வர்த்தகத்தைத் துவங்கி டன்கின் டோநட்ஸ்-க்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
டன்கின் டோநட்ஸ்-ன் முக்கிய வர்த்தகம் காலை உணவு அதாவது பிரேக்பாஸ்ட் தான், ஆனால் இந்திய மக்களின் காலை உணவு கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டது என்பதை உணராமல் வர்த்தகத்தைத் துவங்கி இன்று வரையில் வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறது.
2012ல் வர்த்தகத்தைத் துவங்கிய டன்கின் டோநட்ஸ் 2018ல் 50 சதவீதத்திற்கும் அதிகமான வர்த்தகத்தை மூடியது.
பியாட்
கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருந்த பியாட், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாகப் பிரபலங்கள் மத்தியில் பியாட் கார்கள் மிகவும் பிரபலமானவை.
ஆனால் பியாட் பிற இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உடன் போட்டி போட முடியாத காரணத்தால் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வந்தது, 2019ல் இந்திய வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு ஜீப் பிராண்ட்-ஐ மட்டும் கவனிக்க முடிவு செய்தது.
பாப்பா ஜோன்ஸ் பிட்சா
இந்தியாவில் டாமினோஸ் பிட்சா, பிட்சா ஹட் ஆகியவை மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், புதிதாக வந்த பாப்பா ஜோன்ஸ் பிட்சா வர்த்தகத்தைப் பெற முடியாமல் தோல்வி அடைந்தது. ஆனால் உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
2006ஆம் ஆண்டுப் பெரும் கனவு இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கிய பாப்பா ஜோன்ஸ் பிட்சா 2017ல் போட்டியை சமாளிக்க முடியாமல் வர்த்தகத்தை மூடியது. பாப்பா ஜோன்ஸ் பிட்சா டாமினோஸ் தனது வர்த்தகத்தைத் துவங்கி 10 வருடத்திற்குப் பின்பு இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் மோட்டார்ஸ்
உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கி அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா ஆட்டோமொபைல் சந்தையை ஆட்டிப்படைக்க வந்தது, ஆனால் இந்தியா நிறுவனங்களின் விலை போரை சமாளிக்க முடியாமல் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்தது.
இதனால் நாளுக்கு நாள் வர்த்தகத்தை இழந்தது மட்டும் அல்லாமல் நஷ்டத்தையும் அடைய துவங்கியது. இதனால் 2009ல் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கிய ஜெனரல் மோட்டர்ஸ் 2017ல் நாட்டை விட்டு வெளியேற வேண்டி நிலை உருவானது.
டானோன்
இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் வர்த்தகத் துறையில் வர்த்தகத்தைத் துவங்க திட்டமிட்டுப் பிரான்ஸ் நிறுவனம் டனோன் வர்த்தகத்தைத் துவங்கியது. ஆனால் 2018ல் பெரும் தோல்வியைச் சந்தித்து மொத்தமாக வெளியேறியது.
இந்திய மக்கள் மத்தியில் பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வு அதிகரித்தாலும், 2010ல் வர்த்தகத்தைத் துவங்கிய டனோன் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாமல் வெளியேற வேண்டிய நிலை உருவானது.
5 Successful International Companies Failed miserably In India after globalization
5 Successful International Companies Failed miserably In India after globalization உலக நாடுகளில் கலக்கினாலும், இந்தியாவில் அட்ரெஸ் கூட இல்லை..!!