தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, திருடிய செல்போனை விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் 3 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மாறி மாறி கத்தியால் குத்தி தாக்கிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.
பெரியகுளம் அரசு பணிமனை முன்பாக நின்று கொண்டிருந்த 3 பேர் திடீரென ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார் இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு நடத்திய விசாரணையில் காயமடைந்த இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், வழிப்பறி செய்த செல்போனை விற்பனை செய்த பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டது தெரியவந்தது.