இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன்- ரஷியா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் இங்கிலாந்து அரசு செய்து வருகிறது. ரஷியாவிற்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடையும் விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷியாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட, போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்..
விவசாயிகள் மகள்களின் படிப்பு செலவுக்கு தனது சம்பளத்தை பங்களிப்பாக வழங்க ஹர்பஜன் சிங் முடிவு