மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் – விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவை! அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்…

திருச்சி: 171 மாணவ மாணவிகளுக்கு “இலவச கல்வி உபகரணங்கள்” மற்றும் 138  கிராமங்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு சார்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தேனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், 1.30 லட்சம் மதிப்பிலான  பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை  வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து,  தேனீரை தூய்மையான மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள குடும்பங்களுக்கு 1.76 லட்சம் மதிப்பில் மூன்று வகையான குப்பைத் தொட்டிகளை வழங்கினார்.

பின்னர் மருங்காபுரி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், 138  கிராமங்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், “திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் தேனூரில் “வேர்ல்ட் விஷன்” இந்தியா திட்டத்தின் மூலம் அரசு தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.1,30,000 மதிப்பில் 171-ஏழை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களையும் மற்றும்  தேனூர் கிராமத் திற்குத் தூய்மையான மாதிரி கிராமமாக மாற்ற ரூ.1,70,000 செலவில் அனைத்து குடும்பத்திற்கும் குப்பைத்தொட்டி வழங்கும் விழா மற்றும் மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 138 கிராமங்களுக்கு ரூ.20,000 செலவில் தடுப்பூசி விழிப்புணர்வு பற்றிய வாகனங்களையும் தொடங்கிவைத்து அரசின் திட்டங்கள் குறித்து இந்நிகழ்வில், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழுத்தலைவர் பழனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் குணா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.