பீச்சில் பெண்ணிடம் தவறாகப் பேசிய காவலர்… மன்னிப்பு கேட்ட டிஜிபி – என்ன நடந்தது?

DGP Sylendra Babu: காவலர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு காவல் துறையை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று இரவு இசிஆர் சாலையில் சி ஷெல் அவென்யூவில் பணியில் இருந்த காவலரின் செயல் மிகவும் மோசமானதாக இருந்தது. அலுவலகம் முடித்து நானும், எனது நண்பரும் மிகுந்த கட்டுப்பாடு மற்றும் கண்ணியத்துடன் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். கடற்கரைக்கு செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் இருப்பது எங்களுக்கு தெரியாது. அப்போது, அங்கு பணியிலிருந்த காவலர், எங்களிடம் ஒரு தீவிரவாதி அல்லது குற்றவாளியிடம் நடந்து கொள்வதை போல் நடந்து கொண்டார்.

நான், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவள். என்னை, வடஇந்தியர் என்று எப்படி பொதுமைப்படுத்த முடியும். தமிழ் மொழி பேச தெரியாது என்பதற்காகவா? என பதிலை கேட்க மறுத்தது மட்டுமின்றி போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டினார்.

கடற்கரைக்கு செல்லும் நேரம் எதுவும் அங்கே நோட்டீஸாக ஒட்டப்படவில்லை. தயவு செய்து ஒழுக்கம் மாற்றம் நடத்தை முறைகள் குறித்து நல்ல முறையில் பயிற்சி கொடுங்கள். இவைகள், அனைத்தும் சாதாரண விஷயங்கள் அல்ல. அவர் அப்படி என்னிடம் நடந்து கொள்ள நான் ஒன்றும் குற்றவாளி அல்ல” என பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பதில் அளித்துள்ளார். அதில், பணியிலிருந்த காவல் அதிகாரியின் பொறுப்பற்ற முரட்டுத்தனமான நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.