MHA IB recruitment 2022 for 150 ACIO posts apply soon: இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்) (Assistant Central Intelligence Officer – Tech) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 150
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் : 56
மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பியல் : 94
கல்வித் தகுதி : B.E or B.Tech in Electronics/ Electronics and Telecommunication/ Electronics and communication/ Electrical and Electronics / Information Technology / Computer science/ Computer Engineering (or) Master’s Degree in Electronics/ Physics/ Computer applications
வயதுத் தகுதி : 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 44,900 – 1,42,400
தேர்வு செய்யப்படும் முறை : 2022 ஆம் ஆண்டில் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.
இதையும் படியுங்கள்: திருநெல்வேலி மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!
GATE தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mharecruitment.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.