தீர்த்தவாரி வைபவம்: தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்வித்த பக்தர்கள்

சித்திரை திருவிழா கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.
சித்திரை திருவிழாவில் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது, இதனையடுத்து இராமராயர் மண்டபத்திற்கு வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்றனர், கள்ளழகருக்காக கருப்பசாமி வேடமணிந்த பக்தர்கள் விரதமிருந்து ஆட்டு தோல் பையில் தண்ணீரை நிரப்பி கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து வேண்டுதலை நிறைவேற்றினர்,
image
தங்கை மீனாட்சியின் திருமணதிற்கு கள்ளழகர் வரும் முன்பே திருமணம் நடைபெற்றதால் கோபத்தில் திரும்பும் கள்ளழகரின் மனதை குளிர்விக்கும் விதமாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவதாக மக்கள் நம்பிக்கை, இந்நிகழ்வைத் தொடர்ந்து இராமராயர் மண்டபத்திலிருந்து புறப்படும் கள்ளழகர் அண்ணா நகர் வழியாக வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலிலுக்குச் செல்கிறார், அப்போது வழியேங்கும் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்,
image
இதைத் தொடர்ந்து நாளை காலை தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க உள்ளார், பின் இரவு இராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.