புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவிதார். புதுச்சேரிக்கு ஒரு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.