ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வதும், இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வதும் ஈஸ்டர் திருநாளின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ள ஜி.கே.வாசன், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
கிறிஸ்தவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை கொண்டாடுவது சிறப்புக்குரியது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் கொண்டாடப்படுவது தான் ஈஸ்டர் பண்டிகை.
கிறிஸ்தவர்கள் அனைவருடனும் அன்போடு பழகுவதும், ஒற்றுமையாக இருப்பதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிக்கரமாக இருப்பதும் பெருமைக்குரியது.
தீயவற்றை தள்ளி, நல்லவற்றை சேர்த்து வாழும் புதிய வாழ்வின் தொடக்கமாக ஈஸ்டர் அமைந்திருக்கிறது.
ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வதும், இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வதும் இத்திருநாளின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்பங்கள் மற்றும் துயரங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ ஈஸ்டர் திருநாள் வழி காட்டட்டும்.
கிறிஸ்தவர்கள் நல்ல முயற்சிகளில் ஈடுபட்டு, வாழ்வில் முன்னேற்றம் அடையவும், மகிழ்வுடன் வாழவும் இயேசு கிறிஸ்து துணை நிற்க வேண்டி, ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.