டிவிட்டர் நிறுவனத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்று எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ் கைகளுக்குப் போகக் கூடாது என்று இந்நிறுவனத்தின் ஊழியர்களும், சில முதலீட்டாளர்களும் திட்டமிட்டு வருகின்றனர்.
2-3 வாரங்களில் 20% வரை லாபம் கிடைக்கலாம்.. 3 பங்குளை பரிந்துரை நிபுணர்கள்..!
எலான் மஸ்க் அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளார்.
டிவிட்டர்
டிவிட்டர் போன்ற சமுக வலைத்தளத்தில் வருமானத்தைத் தாண்டில் ஆதிக்கம் செலுத்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும், மக்களுக்கு மேம்பட்ட சேவையை டிஜிட்டல் உலகில் வழங்க முடியும் என்பதாலேயே டிவிட்டரை ரிஸ்க் எடுத்து வாங்க உள்ளார். ஆனால் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதைத் தடுக்கத் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிவிட்டர் நிர்வாகக் குழு
டிவிட்டர் நிர்வாகக் குழு தற்போது எலான் மஸ் கொடுத்த 43 பில்லியன் டாலர் ஆஃபரை மறுக்க அதிகளவிலானோர் மறுத்தாலும், உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கு முக்கியக் காரணம் டிவிட்டர் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் மாறுப்பட்ட நிலைப்பாடு தான்.
poison pill திட்டம்
இதைச் சமாளிக்கத் தற்போது நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியினர் ‘poison pill’ என்னும் முறையைக் கையாள முடிவு செய்துள்ளது. இதை ஷேர்ஹோல்டர் ரைட்ஸ் பிளான் என்றும் அழைக்கப்படும். தற்போது எலான் மஸ்க் 9.2 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
முதலீடு
இத்திட்டம் மூலம் ஏற்கனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூடுதலான முதலீடு செய்து அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றி நிறுவனத்தின் விற்பனையைத் தடுக்கும் அளவிற்கான ஆதிக்கத்தை நிர்வாகக் குழுவில் பெறுவது தான்.
வேன்கார்டு, கிங்டம்
எலான் மஸ்க் பங்கு முதலீடு அறிவித்த உடனே டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியமான முதலீட்டாளராக இருந்த வேன்கார்டு கூடுதலாக முதலீட்டை பெற்று நிர்வாகக் குழுவில் மஸ்க்-கை காட்டிலும் கூடுதலான ஆதிக்கத்தைப் பெற்றது. இதேபோல் ஐக்கிய அரபு நாட்டின் கிங்டம் நிறுவனமும் கூடுதலான டிவிட்டர் பங்குகளைப் பெற்றுள்ளது.
Twitter board is using poison pill tactic to prevent elon Musk acquisition
Twitter board is using poison pill tactic to prevent elon Musk acquisition எலான் மஸ்க்-ஐ ஓரம்கட்ட, டிவிட்டர் எடுக்கும் ‘poison pill’.. என்ன நடக்கப் போகிறது..!