வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் ராணுவக் கிடங்கை ரஷ்யா அதிநவீன நீண்ட தூரம் பாயும் திறன் கொண்ட ராக்கெட் உதவியுடன் தாக்கி அழித்துள்ளது.
கடந்த 52 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. இந்நிலையில் அண்டை நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அரசு ரஷ்யாவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் போர் புரிந்து வருகிறது.
இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் குடிமக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ராணுவ ஆயுதங்கள் தயாரிப்பு கிடங்கை அதிநவீன இலக்கை நோக்கி தாக்கக்கூடிய ராக்கெட் கொண்டு ரஷ்யா அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கீவ் நகரின் மேயர் விடலி கிலிஸ்கோவ் கூறுகையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சத்ததை தான் கேட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் உக்ரைன் ராணுவ கிடங்கு சின்னாபின்னமாகி உள்ளது.
Advertisement