பதவியிலிருந்து ஒருவழியாக இறங்கினார் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா! … கான்ட்ராக்டர் தற்கொலைக்கு காரணம் என்ற வழக்கால் முடிவு| Dinamalar

கைது செய்து விசாரிக்க கோஷத்தை மாற்றியது காங்கிரஸ்படம்: 16_Congress Protest படம்: 16_kadur பெங்களூரு, ஏப். 16-கான்ட்ராக்டர் தற்கொலை விவகாரத்தில் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அமைச்சர் ஈஸ்வரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரை கைது செய்ய வலியுறுத்தி, விதான் சவுதாவில் பகல் இரவு போராட்டம் நடத்தி வரும் காங்கிரசார்,

இன்று முதல் மாநிலம் முழுதும் ஊழல் ஒழிப்பு போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.பெலகாவியை சேர்ந்த அரசு பணிகளுக்கான கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல், 35, என்பவர், பா.ஜ., தொண்டர். இதற்கு முன், காங்கிரசிலும் இருந்துள்ளார்.இவர், கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான 108 சாலை பணிகளை மேற்கொண்டதாகவும், அதற்கான பணத்தை விடுவிக்க துறை அமைச்சர் ஈஸ்வரப்பா சார்பில், அவரது மகன் 40 சதவீதம் ‘கமிஷன்’ கேட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது புகார் கடிதம் அனுப்பினார்.தற்கொலைஇதையடுத்து, கடந்த 12ல் உடுப்பி சென்ற சந்தோஷ், சாம்பவி என்ற தனியார் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார். ‘மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம்’ என்று வாட்ஸ் ஆப் குறுந்தகவலில் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பினார்.உடுப்பி போலீஸ் நிலையத்தில் அமைச்சர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினர்.ஆரம்பத்தில், ‘எந்த தவறும் செய்யவில்லை என்பதால், அமைச்சர் பதவியில் இருந்து விலக மாட்டேன்’ என்று ஈஸ்வரப்பா முரண்டு பிடித்தார். டில்லியில் இருந்து பா.ஜ,., மேலிட தலைவர்கள் அறிவுறுத்தலை அடுத்து, கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படக்கூடாது என்பதால் ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.ஆதரவாளர்கள் பேரணிஇந்நிலையில், ஷிவமொகாவிலிருந்து கார் மூலம் பெங்களூரை நோக்கி அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று மதியம் புறப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பைக்குகள், கார்களில் பின் தொடர்ந்தனர். சாலையோர ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டார். திப்துாரில் தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ், அவரை வரவேற்று மோர் வழங்கி, ஆறுதல் கூறினார்.துமகூரில் சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் பிருந்தாவனத்தில் வணங்கினார். பெங்களூரின் குமாரகிருபா வடக்கு பகுதியில் உள்ள தன் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வந்த அவரை, நுாற்றுக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள் வரவேற்றனர்.ராஜினாமாபின், முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து, கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வழங்கினார். முதல்வரும் ஏற்றுகொண்டு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு அனுப்பி வைத்தார்.ஈஸ்வரப்பா கூறியதாவது:ராஜினாமாவால் என் ஆதரவாளர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என் மீது காட்டும் அன்புக்கு நன்றி.என் மீது சூழ்ச்சி நடந்துள்ளது. அவர்களுக்கு தகுந்த பாடம் கிடைக்கும். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமைச்சராக துறையில் எதிர்பார்ப்பை மீறி பணியாற்றினேன்.கொலையா?சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என்பது விசாரணையில் தெரிய வரும். நான் நிரபராதியாக, மீண்டும் இதே துறை அமைச்சராவேன்.இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் போராட்டம்இதற்கிடையில், முதலில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நடத்திய காங்கிரசின் போராட்டம், ‘அவரை கைது செய்க’ என்ற கோஷத்துக்கு மாறியது.தற்போது கர்நாடக அரசின் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி இன்று முதல், ஒன்பது குழுக்களாக மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து போராட்டம் நடத்துவதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.மேலும், விஜயநகராவில் இன்று நடக்கவுள்ள பா.ஜ., மாநில செயற்குழு கூட்டத்துக்கு இடையூறு செய்யும் வகையில், முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீல் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.ஈஸ்வரப்பா மீதான புகாரில் உண்மை இல்லை. இவை அனைத்தும் காங்கிரசின் சூழ்ச்சி. இதன் பின்னணியில் காங்., தலைவர் ஒருவர் உள்ளார். விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும். குழப்பத்தை உண்டாக்குவதே அவர்களின் பணி.அருண் சிங், மேலிட பொறுப்பாளர், பா.ஜ.,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.