நீதித்துறையில் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம்! தலைமை நீதிபதி ரமணா பேச்சு…

ஐதராபாத்: நீதித்துறையில் பணியிடங்களால் காலியாக இருப்பதால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் என்று கூறிய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என கூறினார்.

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இன்று மாநில நீதிபதிகள் நீதித்துறை அதிகாரிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, ‘நாடு  முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, நீதி மன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு  வருவதாக தெரிவித்தவர், நீதிபதிகள் பாதுகாப்புப் பிரச்னைகள்  குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தேவையான வசதிகள் குறைவாகவே உள்ளன என்று கூறியவர், நாட்டில் நீதித்துறையும் பலப்படுத்தப்பட வேண்டும்; நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் அதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

இந்திய நீதித்துறை அதிக சுமை கொண்டதாக இருப்பதாக கூறிய தலைமை நீதிபதி,  நீதிபதிகள் பற்றாக்குறையினால், நீதிமன்றங்களில் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஒரு வழக்கிற்கு தீர்ப்பு கிடைப்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகிறது என தெரிவித்ததுடன், போதுமான எண்ணிக்கையிலான நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே, அனைத்து குடிமகனுக்கும் நீதி கிடைப்பது சாத்தியமாகும் என்று தெரிவித்தவர்,  உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லை என்று நிலையை பார்க்க விரும்புவதாக கூறினார்.

தெலங்கானா மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 24ல் இருந்து 42 ஆக உயர்த்துவதற்கான நிலுவையிலுள்ள கோப்பை எந்த தாமதமும் இன்றி அனுமதித்ததாக தெரிவித்தார். வழக்குரைஞர்களுக்கு இணக்கமான சூழலை உருவாக்கவும், மனித அம்சங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நீதித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டவர், “சட்டம் சமத்துவத்திலிருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது. உங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்து வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீதித்துறையின் மனித முகத்தை முன்னிறுத்துவது முக்கியம்” என்று கூறினார்.

மேலும் பேசியவர், சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள்எவ்வித அழுத்தத்திற்கும் உள்படாமல் சுதந்திரமாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று ரமணா வலியுறுத்திவர், நீதித்துறை அதிகாரிகள் எவ்வித அச்சமும் இன்றி தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியவர், “நீதிபதிகள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அறிவதாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். நீதிமன்ற அறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், வழக்குகள் தேங்கி கிடப்பதைக் கையாள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வழக்கமான நீதிமன்ற நேரத்தைத் தாண்டி, நீதிமன்றத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்க நேர்மையான முயற்சிகளை நீதித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர், தலைமை நீதிபதி ரமணாவுக்கு தெலங்கானா மாநில பார் கவுன்சில் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.