கருணாஸ் நடிப்பில் உருவான ஆதார் படத்தின் டிரெய்லர் வெளியிடு…! கொண்டாடும் ரசிகர்கள்…!

கருணாஸ்
நடிப்பில் உருவாகியுள்ள ‘
ஆதார்
’ படத்தின்
டிரெய்லர்
வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் கலக்க வந்திருக்கிறார் கருணாஸ். அவர் முதன்மை கதாபாத்திரத்துள்ள திரைப்படம் ‘ஆதார்’.

இந்த படத்தை அம்பானி,
திருநாள்
ஆகிய படங்களை இயக்கிய
பி.எஸ்.ராம்நாத்
இயக்கி வருகிறார். இந்த படத்தில்
ரித்விகா
கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் அருண்பாண்டியன், ஆனந்தபாபு, திலீப், ‘பாகுபலி’ நடிகர் பிரபாகர்,
மனிஷா யாதவ்
உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் கேட்ட வில்லங்கமான கேள்வி: அஜித்தின் தரமான பதிலடி..!

வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில்
சசிக்குமார்
இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையும், மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவும் செய்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மட்டும் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை இனியா வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.