சியோல்: வட கொரியாவில் 50 ஆண்டுகள் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய ரி சுன் ஹி என்பவருக்கு அதிபர் கிம் ஜாங் உன் ஆடம்பர வீடு ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.
கிழக்காசிய நாடான வட கொரியாவில் ரி சுன் ஹி என்பவர் 50 ஆண்டுகளாக அரசு ‘டிவி’யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். 1994ல் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவும் நாட்டின் முன்னாள் அதிபருமான கிம் இல் சங்கின் மறைவு செய்தி முதல் 2006ல் முதல்முறையாக அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது வரை அவர் பல முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக வாசித்துள்ளார்.இந்நிலையில் நாட்டிற்காக ரி சுன் ஹி ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவருக்கு ஆடம்பர சொகுசு வீடு ஒன்றை அதிபர் கிம் ஜான் உன் பரிசாக வழங்கி உள்ளார்.அந்த வீட்டை கிம்முடன் ரி சுன் ஹி பார்வையிடும் புகைப்படங்களை வட கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சியோல்: வட கொரியாவில் 50 ஆண்டுகள் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய ரி சுன் ஹி என்பவருக்கு அதிபர் கிம் ஜாங் உன் ஆடம்பர வீடு ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.கிழக்காசிய நாடான வட கொரியாவில் ரி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.