இரண்டு வருடங்களுக்குப் பிறகு சித்ரா பவுர்ணமி நாளான இன்று திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன், உற்சாகமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.