வில்லியனுார், : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு இன்று மாலை ஆன்மிக நடைபயணம் மேற்கொள்கின்றனர்.புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில் பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதனை சுற்றி பிரசித்தி பெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்கள் ஜீவ சமாதிகள் அமைந்துள்ள ஆன்மிக பூமியாக திகழ்கிறது.
திருவண்ணாமலை கிரிவலம் போல, கடந்த பவுர்ணமி அன்று திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து முதன் முறையாக ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனர்.சித்ரா பவுர்ணமி என்பதால், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த பக்தர்கள், வில்லியனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிவனடியார்கள் ஆன்மிக நடைபயணத்தில் திரளாக கலந்துகொள்கின்றனர்.இன்று மாலை 6:00 மணியளவில் நடக்கும் ஆன்மிக நடைபயண துவக்க விழாவில் வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைக்கிறார்.நான்கு மாட வீதிகள் வழியாக பைபாசில் துவங்கி, ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய் சுவாமி சித்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு காசி விஸ்வநாதர் ஆலயம், சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து, உறுவையாறு, கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைகின்றனர்.ஆன்மிக நடைபயணத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement