உலகின் சிறந்த மருத்துவ கல்லூரிகளில் சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு 60வது இடம்

சென்னை:
உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி 60-வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலை வணிக இதழான சிஇஓ வேர்ல்டு இதழ் வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் ஹார்வேர்டு மருத்துவக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பிடித்துள்ளது. முதல் 21 இடங்களையும் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களே பிடித்துள்ளன. 
இந்நிலையில், 22-வது இடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும், 37-வது இடத்தில் புனே இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியும், 46-வது இடத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும், 55-வது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், 60-வது இடத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியும் இடம்பிடித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.