மரியுபோல் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவேன்! உக்ரைன் பணக்காரர் சபதம்


உக்ரைனின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

உக்ரைனைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான Rinat Akhmetov, கடந்த 7 வாரங்களாக ரஷ்ய இராணுவ படையின் ஷெல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் சுக்குநூறாக சிதைக்கப்பட்டுவரும் துறைமுக நகரமான மரியுபோலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளார்.

மரியுபோல் நகரம் அவரது இதயத்திற்கு நெருக்கமான இடம் என்றும், அங்கு அவருக்கு சொந்தமான இரண்டு பெரிய இரும்பு ஆலைகள் இருப்பதாகவும், அவை இரண்டும் மீண்டும் உலகளவில் போட்டியிடும் அளவிற்கு மீட்டெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தற்போதைக்கு, உக்ரைனின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பாளரான அவரது Metinvest நிறுவனம், அதன் விநியோக ஒப்பந்தங்களை வழங்க முடியாது என்று அறிவித்துள்ளது, மேலும் அவரது நிதி மற்றும் தொழில்துறை நிறுவனமான SCM குழுமம் அதன் கடன் கடமைகளை நிறைவேற்றிவருகிறது. அதேபோல், ​​அவரது தனியார் மின் உற்பத்தி நிறுவனமான DTEK அதன் கடன்கள் குறித்து கடன் வழங்குபவர்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது.

மரியுபோல் நகரம் குறித்து ராய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அக்மெடோவ், “மரியுபோல் ஒரு உலகளாவிய சோகம் மற்றும் வீரத்தின் உலகளாவிய உதாரணம். என்னைப் பொறுத்தவரை, மரியுபோல் எப்போதும் உக்ரேனிய நகரமாக இருந்து வருகிறது” என்று கூறினார்.

“எங்கள் துணிச்சலான வீரர்கள் நகரத்தைப் பாதுகாப்பார்கள் என்று நான் நம்புகிறேன், இருப்பினும் அது அவர்களுக்கு எவ்வளவு கடினமானது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று அவர் கூறினார். 

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.