ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் (Photos)


ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் மட்டக்களப்பு மாநகரசபைக்கு
விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் அவரை வரவேற்றதுடன்,
மாநகரசபையின் வாகன பகுதியையும் பார்வையிட்டனர்.

2003ஆம் காலப்பகுதியில் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் ஜேர்மனியின்
முனீச் மாநகர முதல்வராகவிருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்
கீழ் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில்
முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் ஜேர்மன் முனிச் மாநகரசபைக்கும் இடையில்
மேற்கொள்ளப்பட்ட உடன்படியின் கீழ் பெருமளவான திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜேர்மன் முனீச்
முன்னாள் முதல்வரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜேர்மன் நாடாளுமன்ற
உறுப்பினர் மோஹாத்துக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது மாநகரசபைக்கு உடன்படிக்கையின் கீழ் 2003ஆம் ஆண்டு அன்பளிப்பு
செய்யப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த
வாகனங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றமை குறித்து முதல்வருக்குத் தனது
பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாநகரசபையின் மண்டபத்தில் மாநகரசபை முதல்வர்
உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் முனீச் மாநகரசபையினால் மட்டக்களப்பு மாநகரசபையில்
மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு ஊடாக
ஒப்பந்தங்களைச் செய்து மேலும் அபிவிருத்தி பணிகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அவருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள்
கலந்துரையாடப்பட்டது. இலங்கை அரசாங்கமானது மட்டக்களப்பு மாநகரசபை மட்டுமன்றி
தமிழ் பகுதிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நோக்கிவருகின்றது.

மட்டக்களப்பு
மாநகரசபையின் 90வீதத்திற்கும் அதிகமான வளங்கள் அரசார்பற்ற நிறுவனங்களினால்
நன்கொடை செய்யப்பட்டவையாகவே இருக்கின்றது. மத்திய அரசாங்கத்தின் மூலம்
கிடைக்கும் வளங்கள் மிகமிக குறைவாகும் என்பதை மிகவும் தெளிவாகக் கூறியிருந்தோம்.

யுத்த காலத்திலிருந்த நிலைப்பாடுகளே யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும்
தமிழர்கள் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகின்றது. நன்கொடைகள் மூலமாகவும்
வெளிநாட்டு உதவிகள் மூலமாகவுமே வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி
திட்டங்களுக்கான நிதிகள் கிடைக்கின்றது.

மத்திய அரசாங்கத்தின் சொந்த
நிதியுதவிகள் என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட ஒதுக்கீடாக
வருகின்றது என்பதைத் தெளிவாக எடுத்து கூறியிருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாநகரசபையினை பொறுத்த வரையில் சொந்த நிதியூடாகவும் அரசார்பற்ற
நிறுவனங்கள் ஊடாகவுமே வளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையே
தொடர்ந்து இருந்துவருகின்றது.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி வெளியேறுமாறு
போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வெறுமனே கதிரைகளை மாற்றாமல்
அரசியலமைப்பில் ஒரு நிரந்தர மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நாட்டில்
பொருளாதார முன்னேற்றத்தினை காணமுடியும்.

வெறுமனே கதிரைகளை மாற்றுவதன் மூலம்
மட்டும் எந்த பொருளாதார முன்னேற்றத்தினையும் காணமுடியாது என்பதை அவரிடம்
தெரிவித்துள்ளோம்.
அனைத்து இன மக்களும் ஒன்றாகவிருக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

தமிழ்
மக்களுக்கு அதிகார பரவலாக்கலினை புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்வாங்கி அந்தத்தந்த
பகுதிகளுக்கு அதிகாரங்களை வழங்கும்போதே அபிவிருத்தியடையும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.