லே: சீன ராணுவத்தினரின் உத்திகளை அறிந்துகொள்ள, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, சீன மொழியான, ‘மாண்டரினை’ பயிற்றுவிக்க, இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், 2020ம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.இதன் விளைவாக, லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ வீரர்கள் திரும்பப்பெறப்பட்டனர்.
எனினும், இதர பகுதிகளில் இருந்து வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை.இந்நிலையில், சீன வீரர்களின் உத்திகளையும் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள, நம் ராணுவ வீரர்களுக்கு, மாண்டரின் மொழியை பயிற்றுவிக்க உள்ளதாக, இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், தகவல் மிகப்பெரிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. எனவே, இதில் இந்திய ராணுவம் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
லே: சீன ராணுவத்தினரின் உத்திகளை அறிந்துகொள்ள, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, சீன மொழியான, ‘மாண்டரினை’ பயிற்றுவிக்க, இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.எல்லைப் பிரச்னை காரணமாக, நம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.