முதுகு வலி காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ரஸிக் சலாம் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்க உள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா அணியில் முதுகு வலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ரஸிக் சலாம் விளக்கியுள்ளார். அவருக்கு பதிலாக டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹர்ஷித் ராணா, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.