அறிவாலயத்தின் விருப்பபடி கருத்து தெரிவிக்காதது தான் இளையராஜா செய்த குற்றமா? – முக்கிய பிரபலம் கொந்தளிப்பு.!

இசையமைப்பாளர் இளையராஜா என்ன குற்றம் செய்தார்? என்று, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். 

புளூகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் வெளியிட்டுள்ள அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். 

இசைஞானி இளையராஜா எழுதியுள்ள முன்னுரையில், “அம்கேத்கரின் வழி நின்று அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற உன்னததிட்டம் கொண்டு வந்து ஏழை ஏளியவரின் மானம் காக்க அம்பேத்கர் உழைத்ததின் முக்கிய வி‌ஷயத்தை பிரதமர் மோடி நனவாக்கியதை நாம் போற்றித்தான் ஆகவேண்டும். 

அம்பேத்கர் கனவுகளையும் அதை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தி வருகிறார். இன்று அம்பேத்கர் உயிருடன் இருந்தால் பிரதமர் மோடியை நினைத்து பெருமை கொள்வார்” என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விசிக, திமுகவை சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நேற்று டிவிட்டரில் இளையராஜாவை கடுமையான வார்த்தையால் திட்டி ஒரு டேக்கையும் ட்ரெண்ட் செய்து இருந்தனர்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இசையமைப்பாளர் இளையராஜா என்ன குற்றம் செய்தார்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும், இந்திய அரசியல் அமைப்பின் கருத்து சுதந்திரத்தின்படியே பிரதமர் மோடி குறித்து இளையராஜா தன் கருத்தை பதிவு செய்துள்ளார். அறிவாலயத்தில் விருப்பபடி கருத்து தெரிவிக்காதது தான் இளையராஜா செய்த குற்றமா? 

திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது” என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.