நெல்சனுக்கு போன் செய்த தளபதி..! அஜித் வழியை பின்பற்றுகிறாரோ ?

விஜய்
மற்றும்
நெல்சன்
கூட்டணியில் உருவான திரைப்படம்
பீஸ்ட்
.
அனிருத்
இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது. மேலும் இப்படத்தில்
பூஜா ஹெக்டே
,
செல்வராகவன்
, யோகி பாபு போன்ற பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

படத்தில் லாஜிக் இல்லையென்றும், கதையில் புதுமை இல்லை என்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லையென்றும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இப்படத்துடன் KGF திரைப்படமும் வெளியாகியுள்ளதால் இரு படங்களையும் ஒப்பிட்டு பார்த்து பீஸ்ட் திரைப்படத்தை சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய்யை சீண்டிய ராம் கோபால் வர்மா ? சர்ச்சையை கிளப்பிய ட்வீட்..!

என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பீஸ்ட் திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கிவருகிறது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதற்கு பின்பு நடிகர் விஜய் நெல்சனுக்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

நெல்சனுக்கு போன் செய்த தளபதி, படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்ளாதிர்கள். நாம் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என கூறியுள்ளதாக தெரிகின்றது.

இதுபோல தான் விஜய் இயக்குனர் பரதனுக்கு அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு மீண்டும் பைரவா படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

பீஸ்ட்

அதே போல பீஸ்ட் திரைப்படம் விமர்சனத்திற்கு உண்டான நிலையில் மீண்டும் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று தெரிகிறது. மேலும் இதை கேள்வி பட்ட ரசிகர்கள் அஜித் தான் எப்போதும் தோல்வி படத்தை கொடுத்த இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்.

விஜய்

விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகு சிவாவிற்கு விஸ்வாசம் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதேபோல தற்போது விஜய்யும் செய்யப்போகிறார் என கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Hindi க்கு விஜய் காட்டிய ரெட் சிக்னல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.