டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால்: கல்வீச்சு தாக்குதலில் போலீசார் உட்பட பலர் காயம்

டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது, ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதில் பலர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்கள் சுட்டதில் போலீசாரும் காயமடைந்துள்ளனர். வன்முறை குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் அனுமன் ஜெயந்தியின் போது இரண்டு பிரிவினர் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.இந்தியாவில் தற்போது மத ரீதியான, ஜாதி ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளது. வெறுப்பு பிரச்சாரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இது போன்ற மோதல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்நிலையில்,நேற்று அனுமன் ஜெயந்தி விழாவின் போது டெல்லியில் ஜஹாங்கீர் பூரி பகுதியில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அங்கே சிலை வைப்பதில் இரண்டு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.  இதில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி கற்களால் தாக்கிக்கொண்டனர். மோதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். ஆனால் அங்கு வந்த போலீசார் மீதும் இரண்டு தரப்பினரும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி உள்ளனர். பல போலீசார் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். அங்கு இருந்த கடைகள் பல இந்த தாக்குதலில் அடித்து உடைக்கப்பட்டன. அதேபோல் பல்வேறு வாகனங்கள் அடித்து உடைக்கபட்டு, தீ வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் காயம் அடைந்த நபர்கள் பாபு ஜாக்விஜிவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த தாக்குதல் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளது. டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துளளார். தவறு செய்தவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  டெல்லி முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, டெல்லி போலீசின் அவசர பாதுகாப்பு படை பிரிவினர் இந்த கலவரத்தை அடக்க குவிக்கப்பட்டுள்ளனர்.  டெல்லி போலீசை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது பற்றி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  அமைதியை நிலைநாட்ட வேண்டும். கலவரத்தில் ஈடுபடும் நபர்களை ஒடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். அங்கு மொத்தம் 200 அவசர பாதுகாப்பு படையினர் தரிப்பது குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்எல்ஏ கபில் மிஸ்ரா இந்த சம்பவம் சாதாரண நிகழ்வு கிடையாது. இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று விமர்சனம் செய்துள்ளார்.’

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.