வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்- தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய கலாச்சாரம்
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்திராவில் நடந்த உத்தர் பாரதிய சங் பவன் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- மும்பையில் 3, 4 தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறிவிட்டனர்.

மும்பையில் உள்ள டாடா புற்று நோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகின்றனர். அப்போது அவர்கள் தங்கும் இடம் போன்ற வசதிகள் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இந்த பவன் அதுபோன்றவர்களுக்கு நிவாரணத்தை வழங்கி உள்ளது.
நடைபாதைகளில் தங்குவார்கள்
இந்த புதிய கட்டிடம் வெளிமாநிலங்களில் வரும் புற்று நோயாளிகளின் குடும்பத்தினர் குறைந்த செலவில் தங்க வசதியை ஏற்படுத்தி உள்ளது. எனது தந்தையை புற்று நோய் சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, நோயாளிகளின் குடும்பத்தினர் தங்க இடம் இல்லாமல் நடைபாதைகளில் தங்கி இருந்ததை பார்த்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.