எஸ்.சி., – எஸ்.டி., பிரதிநிதித்துவம் பற்றிய தரவுகளை சேகரிக்க உத்தரவு!  மத்திய அரசு துறைகளுக்கு பணியாளர் நல அமைச்சகம் கடிதம்

பதவி உயர்வில் எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அவர்களின் பிரதிநிதித்துவம் பற்றி தரவுகளை சேகரித்து தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு துறைகளுக்கு பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் கீழுள்ள 90 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இட ஒதுக்கீடு பட்டியல்இதில், மத்திய செயலக பணியில் மட்டும் ௬,௨௧௦ அதிகாரிகள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரித்து, டில்லியில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வீட்டின் முன் கடந்த பிப்ரவரியில் ௧,௫௦௦க்கும் அதிகமான அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த, ௬,௨௧௦ பணியிடங்களிலும் ௧,௮௩௯ இடங்கள் காலியாக உள்ளன.இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3,800 உயர் பதவிகள் உள்ளன. ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பான அதிகாரியாக இருப்பவர், இட ஒதுக்கீடு பட்டியலை பராமரிக்க வேண்டியது அவசியம். இதற்கிடையே, ‘எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை நிரூபிப்பதற்கான தரவுகளைச் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில நிபந்தனைகள்இந்நிலையில், மத்திய அரசின் துறைகளின் செயலர்களுக்கு, பணியாளர் நலத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பதவி உயர்வுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு துறையும் சில நிபந்தனை களை கடைப்பிடிக்க வேண்டும்.

எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான தரவுகளை ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக சேகரிக்க வேண்டும். பதவி உயர்வு தொடர்பான விஷயங்களை பரிசீலிக்கும்போது, சம்பந்தப்பட்ட துறையின் பதவி உயர்வுக் குழுவானது, பதவி உயர்வுக்கான அதிகாரிகளின் தகுதியை தீர்மானிக்க வேண்டும். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதி செய்த பின், பதவி உயர்வு வழங்குவதை அமல்படுத்த வேண்டும்.

அதேநேரத்தில், செயல் திறனுக்கான அளவுகோளை நிறைவேற்றும் மற்றும் தகுதியானவர் என அறிவிக்கப்படும் அதிகாரிகளுக்கு மட்டுமே, பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

– நமது சிறப்பு நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.