புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு பிரிவினரும் தீவிரவாதத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் காட்டும் வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்திரத்தன்மைக்கான காஷ்மீரிகளின் போராட்டத்தில் வலுவுடன் துணை நிற்பதாக குடிமக்களுக்கு உறுதி அளித்துள்ளது.
‘காஷ்மீர் மீண்டும் போராடுகிறது’ என்ற தலைப்பில் இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
அதில் காஷ்மீரில் தீவிரவாதத்தால் மதப் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் படும்துன்பங்களையும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலையை ஏற்படுத்த பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் காட்ட முயற்சித்துள்ளது.
“பல்லாண்டு கால தீவிரவாதம் நம்மை அனாதைகள், விதவைகள், புலம்பும் தாய்கள் மற்றும் ஆதரவற்ற தந்தைகளாக விட்டுச் சென்றுள்ளது” என்று அதிலுள்ள உரை தெரிவிக்கிறது. “அவர்கள் நமது சமூகத்தை பிளவுபடுத்த முயன்றனர், நமது இளைஞர்களை தவறாக வழிநடத்த முயன்றனர். துறவிகள் வாழ்ந்த நமது நிலத்தை அவர்கள் போர்க்களமாக மாற்ற முயன்றனர்” என்றும் அந்த உரை கூறுகிறது.
தீவிரவாதிகளால் பல்வேறு துறையினருக்கும் இந்த வீடியோ அஞ்சலி செலுத்துகிறது. பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு படையினர் ஆறுதல் அளிப்பதையும் இது காட்டுகிறது.
“कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी
सदियों रहा है दुश्मन दौरे जहां हमारा”
-Iqbal#Kashmir & #Chinarwarrior have together fought for sustainable peace and prosperity in Kashmir.#kashmirlivesmatter #KashmirAgainstTerror @adgpi @NorthernComd_IA@OfficeOfLGJandK pic.twitter.com/I8WXb9vRot— Chinar Corps – Indian Army (@ChinarcorpsIA) April 15, 2022