வீரர்களுக்கு சீன மொழி: இந்திய ராணுவம் முடிவு!

இந்திய – சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

இதையடுத்து,
எல்லை பிரச்சினை
தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இரு தரப்புக்கும் இடையே தளபதிகள் மட்டத்தில் இதுவரை 15 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் காரணமாக, பான்காங் சோ, கல்வான் மற்றும் கோக்ரா ஹாட் ஸ்பிரிங் ஆகிய பகுதிகளின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் படைகள் வாபஸ் பெறுவது உள்ளிட்ட விஷயங்களில் தீர்வு காண இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்ச்சைக்குரிய பகுதிகளில் தீர்வு காண இரு நாட்டு ராணுவமும் கவனம் செலுத்த உள்ளன. ஒரு அதன் ஒரு பகுதியாக, ஏற்று கொள்ள கூடிய தீர்வு ஏற்படுவதற்காக இரு நாட்டு தரப்பிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் ஊக்கமளிக்கின்றன என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், வீரர்களுக்கு சீன மொழியான
மாண்டரின்
மொழியை கற்றுத்தர இந்திய ராணூவம் முடிவு செய்துள்ளது. சீன வீரர்களின் உத்திகளையும், அவர்களின் கண்காணிக்களை அறிந்துகொள்ளவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக
இந்திய ராணுவம்
தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தகவல் மிகப்பெரிய ஆயுதமாக பார்க்கப்படுவதால், இந்திய ராணுவம் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.