மும்பை: இந்திய அணிக்குள் நுழைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், இது அதன் ஒரு படி என அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். நடப்பு ஐபில் தொடரில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்காக 66 ரன்கள் விளாசிய அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக், நான் கடினமாக உழைக்கிறேன் எனவும் என்னுடைய ஆசையெல்லாம் இந்த நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார்.
