குறிப்பிட்ட காண்டாக்டிற்கு மட்டும் ‘லாஸ்ட் சீன்’ மறைக்கும் வசதி – வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்

WhatsApp new update: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறிப்பிட்ட சில காண்டாக்ட்-க்கு மட்டும் லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ், ப்ரொபைல் போட்டோ, அபவுட் போன்ற விவரங்களை மறைக்கும் வசதியை சோதித்து வருகிறது. இந்த வசதி, தற்சமயம் iOS 22.9.0.70 உபயோகிக்கும் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தகவல் போர்டல் வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட்களின்படி, இந்த பீட்டா வெர்ஷன் கொண்ட பயனர்கள், வசதியை அணுக Settings > Account > Privacy பக்கத்திற்கு செல்ல வேண்டும். அந்த செக்ஷனில், இந்த குறிப்பிட்ட காண்ட்கட் வசதியை மறைத்திட புதிய ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட் முன்பு, அங்கு Everyone, My contact, and Nobody என 3 விருப்பங்கள் மட்டுமே இருக்கும். தற்போது, புதிதாக “My Contacts except சேர்க்கப்பட்டுள்ளது. இதில், சேர்க்கும் நம்பர்களுக்கு லாஸ்ட் சீன் தெரியாது.

இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு ஏப்ரல் 16 அன்று வெளியிடப்பட்டது. விரைவில், அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு, வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு 5 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அவை, கம்யூனிட்டிஸ், 2ஜிபி ஃபைல் ஷேரிங், வாட்ஸ்அப் காலில் கூடுதல் நபர்கள், குரூப் அட்மினுக்கு எக்ஸ்ட்ரா அதிகாரம், ரியாக்சஷன் ஆகும். இவை கூடுதல் விரிவான தகவலுக்கு இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்: https://tamil.indianexpress.com/technology/whatsapp-5-upcoming-features-must-see-441645/

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.