5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்?

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 5% ஸ்லாட் நீக்கம் குறித்து விவாதித்து வருவதாகவும், இதனால் சில பொருட்களுக்கான வரி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017ல் மத்திய அரசு இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரியினை அறிமுகம் செய்தது.

அப்போது 5% வரி விகிதம், 12%, 18% மற்றும் 28% என வரி விகிதம் விதிக்கப்பட்டது.

5% நீக்கப்படலாம்

இந்த நிலையில் தற்போது குறைந்தபட்சமாக உள்ள 5% வரி விகிதாச்சாரத்தினை நீக்கலாம் என்றும், இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள.

இது குறித்து மே மாதம் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். அல்லது இது குறித்த அறிவிப்பினை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரி அதிகரிக்கலாம்

வரி அதிகரிக்கலாம்

இதில் சில பொருட்கள் மட்டும் 3% விகிதாச்சாரத்திற்கு மாற்றப்படலாம் என்றும், மற்றவை 8% ஆக அதிகரிக்கலாம் எனவும் தெரிகிறது.. இது அரசின் வருவாயினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் 5% விகிதாச்சாரத்துக்கு பதிலாக 7%, 8% மற்றும் 9% என அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு 1% அதிகரிப்புக்கும் அரசுக்கு கூடுதலாக, ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானத்தினை கொடுக்கலாம்.

விரைவில் ஆய்வறிக்கை சமர்பிக்கலாம்
 

விரைவில் ஆய்வறிக்கை சமர்பிக்கலாம்

எப்படியிருப்பினும் பல் விவாதங்கள் இது குறித்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான குழு ஒன்றை குழு ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. இந்த குழுவானது தனத்யு ஆய்வறிக்கையினை அடுத்த மாதம் சமர்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வறிக்கையில் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்பு

பாதிப்பு

மத்திய அரசின் இந்த முடிவால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கலாம் என்றாலும், 5% இதுவரை வரி செலுத்தியவர்கள் இனி கூடுதலாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். ஏற்கனவே அதிகரித்துள்ள விலைவாசி, எரிபொருள் விலையால் பாதிக்கப்பட்டுள்ள வணிகம் இந்த அதிகரிப்பினால், இன்னும் கூடுதல் சுமையை எதிர்கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி

English summary

GST council may remove 5% slap in next month: check details

GST council may remove 5% slap in next month: check details/5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்?

Story first published: Sunday, April 17, 2022, 19:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.