சென்னை வாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு., பயன்படுத்தி கொள்ளுங்கள்.!

சென்னை மாநகராட்சியில் நாளொன்றிற்கு சேகரிக்கப்படும் 5000 டன் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து, அதில் மக்கும் குப்பைகளிலிருந்து மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நுண் உரமாக்கும் மையங்கள் இயற்கை முறையில் உரம் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் அதிகளவில் பொதுமக்கள் கூடும் பூங்காக்களில் உரம் விற்பனை செய்யப்பட நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள், பொது இடங்கள் போன்ற இடங்களில் உரம் விற்பனை செய்யப்பட்டது. கிலோ 15 ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 

மேலும், உரத்தின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.