அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இ.தொ.கா கலந்து கொள்ளாது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இ.தொ.கா கலந்து கொள்ளாது.

இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானம் பற்றி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சரருமான ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.

தாம் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதாக வெளியான கருத்துக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். சமகால பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வரையில், எதுவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லையென ஆளுங்கட்சிக்கு தாம் அறிவித்துள்ளதாக அவர் ட்விற்றர் பதிவில் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையைத் தொடர்ந்து என்ன செய்வதெனத் தெரியாது. அத்துடன், எந்தவொரு கட்சியோ கூட்டணியோ பெரும்பான்மையைப பெறத் தவறும் பட்சத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும்; எதிர்க்கட்சி அறிவிக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பற்றிய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் தமது ட்விற்றர் கணக்கின் ஊடாக விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு நீண்டகால அமைப்பொன்ற ரீதியில் தொழிலாளர் காங்கிரஸ் நடுநிலைக் கோட்பாட்டை அனுசரிக்கிறது. இருந்தபோதிலும், சூழ்நிலைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு. அறிவுபூர்மான தீர்மானத்தைக் கூட்டாக மேற்கொளள வேண்டும். இதற்காக கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.