டெல்லி அனுமன் ஜெயந்தி வன்முறை: நடந்தது என்ன? கைதானவர்கள் யார்? – வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லியில் அனுமன் ஜெயந்தி பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் சிறுவன் என்று அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்

டெல்லி ஜஹாங்கிர்புரியில் சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி பேரணியின் போது ஏற்பட்ட மோதலை அடுத்து  துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் அவர் சிறுவன் என்று கூறியுள்ளனர். அந்த சிறுவன் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் பிறப்புச் சான்றிதழைக் காட்டி, அவர் 2005 இல் பிறந்த மைனர் என்றும் அந்த நபரின் குடும்பத்தினர் கூறினர். ஆனால், சனிக்கிழமையன்று நடந்த மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 22 வயது என்று போலீசார் கூறியுள்ளனர். இவர் 2020 ஆம் ஆண்டு மற்றொரு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படுவதால், அவரை ‘தொடர்ச்சியாக குற்றம் செய்பவர்’ என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Family of accused who opened fire during Hanuman Jayanti rally in Delhi  claims he's minor - India News

வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் சனிக்கிழமை மாலை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த வன்முறையில் பல போலீசார் காயமடைந்தனர், இந்த வன்முறையில் கற்கள் வீசி சில வாகனங்கள் எரிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த மோதலின் போது ஆறு ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர், ஒரு போலீஸ்காரர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையில் காயமடைந்தவர்களில் ஏஎஸ்ஐ அருண்குமாரும் ஒருவர். தான் பார்த்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும், சுற்றிலும் பரபரப்பு நிலவியது என்றும் கூறினார்.
Jahangirpuri clash: BJP MP alleges 'international conspiracy', families of accused  protest | Top points - India News

இது தொடர்பாக பேசிய அவர், “அனுமன் ஜெயந்தி ஊர்வலம் குஷால் சவுக்கை அடைந்ததும், ஆயிரக்கணக்கானோர் திடீரென ஊர்வலத்தை நோக்கி வந்தனர். அதன்பின்னர் இரு தரப்பிலிருந்தும் கல் வீச்சும், தாக்குதலும் நடந்தது. நாங்கள் அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தோம், ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. அனைவரின் கைகளிலும் வாள்கள் மற்றும் கத்திகள் இருந்தன. சுற்றிலும் பலர் கைகளில் கற்கள், பாட்டில்கள் இருந்தன. பல வாகனங்கள் எரிக்கப்பட்டன” என்று அவர் கூறினார்,Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.