ஈஸ்டர் பண்டிகை – கடலின் 145 அடி ஆழத்தில் முட்டையை உடைத்து கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சி வீரர்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் 145 அடி ஆழத்தில் ஆழ்கடலில் முட்டையை உடைத்து கொண்டாடி ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார் ஆழ்கடல் பயிற்சி வீரர் தமிழ்.

ஈஸ்டர் பண்டிகையை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தில் மிகவும் பாரம்பரியமான ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டமாக மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதே போல் அந்த முட்டையை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
image

அந்த வகையில் இந்த ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக புதுச்சேரி கதிர்காமம் பகுதியை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர்  தமிழ் என்பவர், புதுச்சேரி கடல்பகுதிக்கு சென்று 145 அடி கடல் ஆழத்தில் தனது நண்பருடன் நடனமாடியும், 145 அடி ஆழத்தில் ஈஸ்டர் முட்டையை உடைத்தும் பண்டிகையை கொண்டாடினார். ஆழ்கடலில் முட்டையை உடைத்தால் அதன் மஞ்சள் கரு உடையாமல் மிதப்பதையும் தனது வீடியோவில் காட்சிப்படுத்தியுள்ளார். இந்த காணொலி அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
image

கடந்த 4 வருடங்களாக ஆழ்கடல் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் தமிழ் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வகையில் கடலில் 70 அடி ஆழத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு தனது ஆழ்கடல் திறமைகளை வெளிப்படுத்தினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.