மீண்டும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் பூஜா ஹெக்டே

ஐதராபாத்: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில், சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ‘கானி’ என்ற தெலுங்கு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். சிரஞ்சீவி, காஜல் அகர்வால், ராம் சரண், பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ஆச்சார்யா’ படத்தில், ஒரு பாடல் காட்சியில் ரெஜினா நடனமாடி இருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘எஃப் 3’ என்ற படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.