இப்படியொரு சிக்ஸரா…ரஷித் கானின் அதிரடியில் திகைத்த ரசிகர்கள்: வியந்துப்போன பிராவோ!



சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல்-லின் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் மட்டையை சுழற்றியதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து நின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல்-லின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று இருந்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயித்த 170 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி இரண்டாவது பேட்டிங்கில் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் வரிசை வீரர்களான சஹா, கில், விஜய் சங்கர் மற்றும் அபினவ் மனோகர் ஆகிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளிக்கவே களத்தில் குதித்த டேவிட் மில்லர் சென்னை அணியின் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டு 51 பந்துகளில் 95 ஓட்டங்களை குவித்தார்.

ஒருபக்கம் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாண்டாலும் மறுமுனை வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறியதால் குஜராத் அணி எப்படியும் தோல்வியை தழுவிவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஆட்டத்தின் 12.5வது பந்தில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி மட்டையில் பட்ட பந்துகள் எவ்வாறு சிக்ஸர்கள் சென்றது என்று தெரியதாக அளவுக்கு ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.

ரஷித் கான் களமிறங்கிய முதல் 12 பந்துகளில் வெறும் 8 ஓட்டங்களை மட்டுமே குவித்த இருந்த நிலையில், அடுத்த 9 பந்துகளில் மட்டும் 32 ஓட்டங்களை குவித்து ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

அதிலும் சென்னை அணி வீரர் ஜோர்டன் வீசிய 18வது ஓவரை 6,6,4,6 என பந்தாடினர், இவற்றில் பிரம்மிப்பூட்டும் விசயம் என்னவென்றால் ரஷித் கான் மட்டையில் பட்டு எவ்வாறு இவை சிக்ஸர்களும் பவுண்டரிகளும் செல்லுகிறது என்பதே, ஹாக்கி மட்டையை சுற்றுவது போல் கிரிக்கெட் மட்டையை சுற்றி ரஷித் கான் பந்துகளை சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விரட்டியது ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது.

இவ்வாறு ரஷித் கான் அடித்த சிக்ஸர் ஒன்றை பார்த்து சென்னை அணி வீரர் பிராவோ வாய்பிளந்து பார்ப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.