மக்கள் விரோத போக்குடன் தமிழக ஆளுநர் செயல்படுகிறார்: திருநாவுக்கரசு எம்பி குற்றச்சாட்டு

விழுப்புரம் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கஸ்தூரி செல்லாராம் மறைவையொட்டி, தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எம்பியுமான திருநாவுக்கரசர் நேற்று முன்தினம் இரவு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு, அவர்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி, மக்களால் தேர்வு செய்த அரசுகளுக்கு தொல்லை தருகிறது. இதை ஒரு வழக்கமாக செய்து வருகிறார்கள். உதாரணமாக புதுச்சேரி, மேற்குவங்கம் போன்ற பல மாநிலங்களை சொல்லலாம்.

அதேபோல், தமிழகத்திலும் செயல்படுகிறார்க்ள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், அமைச்சரவை, முதல்வருக்குதான் முழுமையான அதிகாரம் இருக்கிறது.

இவர்களின் அன்றாட நடவடிக்கைகளிலோ, சட்டமன்ற நடவடிக்கைகளிலோ ஆளுநர் தலையிடக் கூடாது.

தமிழ்நாட்டில் நீட் வேண்டாம் என்ற மக்களின் உணர்வுகளை மதித்து, 2 வது முறையாக மசோதா தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கண்டிப்பாக அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். இதை அனுப்பி வைப்பதற்கே ஆளுநர் தயக்கம் காட்டுகிறார். ம்க்கள் விரோதபோக்குடன் செயல்படுவதற்கான அடை யாளம்தான் இது.

எனவேதான், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது சரியான முடிவு.

தமிழ் உணர்வைப் பற்றியோ, பாரதியார், பாரதிதாசன் குறித்தோ திமுக, காங்கிரசுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அனுபவம் கிடையாது என்று தெரிவித்தார்.

இந்த நேர்காணலின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், கவுன்சிலர்கள் சுரேஷ்ராம், இம்ரான், திமுக கவுன்சிலர்கள் புருேஷாத்தமன், மணிகண்டன், பாமக கவுன்சிலர் இளந்திரையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டமுதல்வருக்குதான் முழுமையான அதிகாரம் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.